ஆசை வார்த்தை கூறி காதலியை ஏமாற்றி உறவு கொண்ட வாலிபர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..!

இளைஞர் ஒருவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் என ஆசை வார்த்தை கூறி ரூம் போட்டு பலாத்காரம் செய்த சம்பவம் கடலூரில் அறங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு அடுத்த தாழங்குடாவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரின் மகன் முரளிதரன்(27). புதுச்சேரி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி விடுதியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த (26) வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லாட்ஜில் ரூம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து, அந்த பெண் போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்தார். பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். மேலும், அதிர்ச்சியடைந்த அப்பெண், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் தோல்வி பெண்ணின் வெளியான மறுமுகம்.. இதனால் தான் கணவர் விட்டுசென்றாரா? வைரலாகும் வீடியோ!

Previous Post Next Post