தமிழகத்தில் புதுமாப்பிள்ளையின் கழுத்தை அறுத்து மச்சான் படுகொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியின் தென்மலை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வரும் இவருக்கு நாளை திருமணம் நடைபெறவிருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்த நிலையில், முனியப்பனின் சகோதரியான முனீஸ்வரியின் கணவர் சங்கிலி முருகன் தகராறு செய்துள்ளார்.
தனக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை எனக்கூறி குடித்து விட்டு சண்டையிட்டுள்ளார்.

எவ்வளவோ கூறியும் கேட்காததால் கோபமடைந்த முனியப்பன் சங்கிலி முருகனை அனைவர் முன்னிலையில் அடித்து துறத்தியதாக தெரிகிறது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த சங்கிலி முருகன், மீண்டும் குடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த முனியப்பனின் கழுத்தை அறுத்துள்ளார்.
வலி தாங்க முடியாமல் கதறியபடி ஓடி வந்த முனியப்பன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார், இதனை பார்த்த உறவினர்கள் சங்கிலி முருகனை பிடிக்க முயன்றும் பலனில்லாமல் போனது.
நாளை புதுமாப்பிள்ளையாக மேடையில் அமரவேண்டிய முனியப்பனின் நிலையை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தனர்.