காத்தான்குடியில் மகனிற்கு தாயொருவர் செய்த கொடூரம்

காத்தான்குடியில் தனது மகனுக்கு தாய் ஒருவர் அயன்பாக்ஸால் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர்வீதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தனது தாயினால் சூடு வைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் குறித்த சிறுவன் தீக் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பாடசலையில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 9 வயதுடைய குறித்த சிறுவன் கல்வி கற்கும் பாடசாலைக்கு இன்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இப்பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவனுக்கு அச் சிறுவனின் தாய் மின்னழுத்தியினால் சூடு வைத்துள்ளதாக கூறியதாக அதிபர் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதல் மறுத்த தாய், அதன் பின்னர் மகனை காண்பித்துள்ளார்.

இந்நிலையில் தாயின் கொடூர செயலால் பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு அதிபரும் ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுவனுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

இது தொடர்பில் அதிபர் தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை சிறுவன் குர்ஆன் மதரஸாவுக்கு செல்லாமல் தூக்கத்தில் இருந்துள்ளான்.

இதன் போது சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் மதராஸாவுக்கு செல்லுமாறு வற்புறுத்தபோது சிறுவன் அங்கிருந்த மின்னழுத்தியை தூக்கி எறிந்துள்ளான்.

இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் மின்னழுத்தியை சூடாக்கி சிறுவனின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்த நிலையில் சிறுவன் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.



இதேவேளை படுகாயமடைந்த சிறுவனுக்கு கடந்த மூன்று தினங்களாக எந்தவொரு சிகிச்சையும் அளிக்காமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாகவும் அதிபர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிருவாகம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகின்றது.
Previous Post Next Post