மனைவி கொலை வழக்கில் திருப்பம்! இரயில் முன்னர் பாய்ந்த பல் மருத்துவர்... தூக்கில் தொங்கிய இன்னொரு பெண்

இந்தியாவில் மனைவி கொலை வழக்கில் அவர் கணவர் இரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்த கொண்டதோடு, வழக்கில் சம்மந்தப்பட்ட இன்னொரு பெண்ணும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த ரேவந்த். பல் மருத்துவர். இவர் மனைவி கவிதா (31). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் கவிதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இதனால் கவிதாவை மர்மநபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்று பொலிசார் கருதி விசாரித்து வந்தனர்.

ஆனால் கவிதாவின் பெற்றோர், எங்கள் மகளை ரேவந்த் கொலை செய்து இருக்கலாம் என்று புகார் அளித்து இருந்தனர்.

இதன்பின்னர் கவிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கத்தியால் கழுத்தை அறுக்கப்படுவதற்கு முன்பு, கவிதாவின் வயிற்றில் 2 மயக்க ஊசி போடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது.



ரேவந்த் மருத்துவர் என்பதால், அவர் தான் கவிதாவுக்கு மயக்க ஊசி போட்டு அதன்பின்னர் கொலை செய்து இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகித்தனர்.

இது குறித்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ரேவந்த்தும், ஹர்சிதா(32) என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் ரேவந்த், கவிதாவையும், ஹர்சிதா பெங்களூருவில் பி.எம்.டி.சி பஸ் டிரைவராக இருக்கும் சுதீந்திராவையும் திருமணம் செய்து கொண்டனர். ஹர்சிதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஹர்சிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது சுதீந்திரா தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ரேவந்தும், ஹர்சிதாவும் பேசி பழகி வந்தனர்.

இதுபற்றி அறிந்த கவிதா, ரேவந்த்தை கண்டித்து உள்ளார். இதனால் ரேவந்த், கவிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழலில் சம்பவத்தன்று காலை கவிதாவை ரேவந்த் ஒரு நகைக்கடைக்கு அழைத்து சென்று அவருக்கு நகை வாங்கி கொடுத்து உள்ளார். பின்னர் இரண்டு பேரும் சண்டை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரேவந்த் 2 மயக்க ஊசியை எடுத்து கவிதாவின் வயிற்றில் போட்டு உள்ளார். இதனால் அவர் மயக்கம் போட்டு விழுந்து உள்ளார்.

இதையடுத்து கவிதாவை கார் நிறுத்தும் இடத்திற்கு தூக்கி சென்ற ரேவந்த், கவிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து உள்ளார். பின்னர் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து கொண்டு வெளியில் சென்றுள்ளது தெரியவந்தது

இந்த நிலையில் பொலிசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த ரேவந்த் இரயில் முன் பாய்ந்து நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.

ரேவந்த் தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த ஹர்சிதா தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous Post Next Post