19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட சிறுவன்.. பெங்களூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

16 வயது சிறுவன் ஒருவம் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்துல் அறங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் சமையல் எரிவாயு சிலிண்டரை வீடுகளுக்குச் சென்று டெலிவிரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளான்.

அப்போது, அந்த சிறுவனுக்கும், அந்த பகுதியில் இருக்கும் 19 வயது இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.



இந்த நிலையில், இவர்களின் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவர, பெண்ணின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், தங்கள் மகள் அந்த சிறுவனுடன் ஓடிவிட்டாள் பெரும் அவமானம் என கருதிய பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுவனுக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. மேலும் இந்த திருமணத்தை ஏற்க முடியாமல் பெண்ணின் பெற்றோர் நேபாளத்திற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், 16 வயது சிறுவனுக்கும், 19 வயது பெண்ணிற்கும் திருமணம் நடந்த விஷயம் போலீசாருக்கு தெரியவர, சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரணையை நடத்திய போலீசார், சிறுவனுக்கு 16 வயது தான் ஆகிறது என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, இளம்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post