யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கிலோ ஹெரோயின் சிறப்பு அதிரடிப் படையினரால் பளைப் பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயினைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பளைப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஹெரோயின் கடத்தப்படுவதாக இரகசியத் தகவல் கொழும்பு சிறப்புக் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்துள்ளது. கொழும்பிலிருந்து கிளிநொச்சி சிறப்பு அதிரடிப் படைத் தலைமையகத்துக்கு உடனடியாக தகவல் பரிமாற்றப்பட்டுள்ளது.
பளைப் பிரதேசத்தில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். சந்தேகத்துக்கு இடமான ‘ஹயேஸ்’ வாகனத்தை மறித்துச் சோதனை மேற்கொண்டபோது, அந்த வாகனத்திலிருந்து ஹெரோயினை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தைச் செலுத்திச் சென்ற இரண்டு பேரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதல்கட்ட விசாரணைகளில், கொழும்பில் ஒரு கோடி ரூபாவுக்கு ஹெரோயினை ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். அதனை ஒப்படைக்க கொண்டு சென்றபோதே கைதாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.